முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 8 ஆண்டுகளை கடந்தது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படம்

8 ஆண்டுகளை கடந்தது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படம்

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருந்த சந்தோஷ் நாராயணனின் இசையும் ஜிகர்தண்டாவுக்கு கூடுதல் சுவையூட்டியது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இரண்டாவது திரைப்படமான 'ஜிகர்தண்டா' எட்டாம் ஆண்டை தொட்டுள்ள நிலையில் அத்திரைப்படத்தினை பற்றிய ஒரு தொகுப்பு.

குறும்படங்களின் சூப்பர் ஸ்டார் இயக்குனராக கவனம்பெற்று 'பீட்சா' வின் தித்திப்பு வெற்றியால் திரையுலகம் நுழைந்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா கொடுத்த இவர்தான் ஜிகர்தண்டாவையும் கொடுத்தார். கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட்டும் ஆனது.

கேங்ஸ்டர் வகை படமாக இருந்தாலும் அதுவரை வந்த கேங்ஸ்டர் படங்களில் இருந்து மாறுபட்டு திரைக்கதையில் அசத்தி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். 'ரௌடி வாழ்க்கையில் சினிமா' என்ற வித்தியாச கதை சொன்ன இந்த ஜிகர்தண்டா, திரைக்கதையில் தன்னை வித்தியாசப்படுத்தி இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முக்கியக் கதையாக மாறும் இதன் திரைக்கதை திரை ரசிகர்களை ஆச்சரிய படுத்தியது என்றால் அது மிகையல்ல,. குறிப்பாக நாயகனாக நடித்திருந்த சித்தார்த்தும் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹாவும் ஜிகர்தண்டாவை ருசி குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

ரவுடி அசால்ட் சேதுவாக ஒரு அசால்ட் நடிப்பை கொடுத்த பாபி சிம்ஹா, தன் நடிப்பில் ரணகளம் செய்திருந்தார். 'என்னைப் பத்தி அவ்ளோ எழுதிட்டு பொம்மைப் படமா போடுற?' என நிருபரை எரிப்பது முதல் 'ஒரு உசுர எடுத்துட்டுத்தான் உள்ள வர்றோம். இன்னொரு உசுர குடுத்தாத்தான் வெளிய போக முடியும்' என பஞ்ச் பேசுவது வரை நடிப்பில் முத்திரை பதித்து தேசிய விருதையும் வென்றார்.

நடிப்பு வாத்தியாராக வரும் சோமசுந்தரத்தின் நடிப்பும் அவர் வில்லன் ஆட்களை நடிக்க வைக்கும் காட்சியும் காமடியால் ரசிகர்களை ஆரவார . படுத்த…… சித்தார்த்தின் நண்பனாக வரும் கருணாகரனும் அந்த ஆரவாரத்திற்கு தன் பங்கை கொடுத்ததும் திரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

Also read... இந்திரா காந்திக்காக பாதயாத்திரைச் சென்ற சிவாஜி கணேசன்

குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருந்த சந்தோஷ் நாராயணனின் இசையும் ஜிகர்தண்டாவுக்கு கூடுதல் சுவையூட்டியது. விசில் இசை வைத்தே டெரர் பின்னணி கொடுத்து மிரள வைத்து , 'கண்ணம்மா கண்ணம்மா...', 'பாண்டி நாட்டு...' பாடல்களில் குத்தாட்டம் போட வைத்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். எட்டாண்டுகள் அல்ல எண்பதாண்டுகள் ஆனாலும் இந்த ஜிகர்தண்டாவின் ருசி தனி ருசியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Karthik subbaraj