அருண் விஜய் படத்துக்கு டைட்டில் மாஃபியா?

துருவங்கள் பதினாறு படத்துக்குப் பிறகு நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

news18
Updated: May 26, 2019, 8:45 PM IST
அருண் விஜய் படத்துக்கு டைட்டில் மாஃபியா?
நடிகர் அருண் விஜய்
news18
Updated: May 26, 2019, 8:45 PM IST
அருண் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு மாஃபியா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டாரர் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கிய ‘தடம்’ படமும் அருண் விஜய்க்கு ஹிட் படமாக அமைந்தது.

இந்தப் படத்தை அடுத்து தற்போது அருண் விஜய் பாக்ஸர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அருண் விஜய். அறிமுக இயக்குநர் விவேக் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. தற்போது கிடைத்த தகவலின்படி இந்தப் படத்துக்கு மாஃபியா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்துக்குப் பிறகு நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

வீடியோ பார்க்க: பிரபல நடிகையை திருமணம் செய்யுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர்!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...