ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தேவயானியை மன்னிப்புக் கேட்க சொன்னவர் மணிவண்ணன்'.. சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த இயக்குநர் களஞ்சியம்!

'தேவயானியை மன்னிப்புக் கேட்க சொன்னவர் மணிவண்ணன்'.. சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த இயக்குநர் களஞ்சியம்!

தேவயானி - மணிவண்ணன்

தேவயானி - மணிவண்ணன்

மற்றவர்கள் அழைப்பதற்குத் தானே பெயர் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் கூப்பிட வேண்டும் என்று பெயர் வைக்கிறோமா? – மணிவண்ணன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை தேவயானியையே படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்க சொன்னவர் மணிவண்ணன் என்றும், அதன் பின்னணி தொடர்பாகவும் இயக்குனர் களஞ்சியம் சுவாரசியமாக கூறியுள்ளார்.

  இயக்குனர் களஞ்சியம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது-

  ’’என்னுடைய முதல் படமான பூமணியில் முரளி, தேவயானி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகை தேவயானியை, என்னுடைய ஸ்டில் போட்டோகிராஃபர் பூபதி, தேவயானி கொஞ்சம் இங்க பாருங்க என்றார். இதனை தேவயானியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

  நீங்கள் எப்படி என்னை பெயர் சொல்லி அழைக்கலாம்? நீங்கள் ஒரு ஸ்டில் போட்டோகிராபர். இயக்குனர் அல்லது கேமராமேன் என் பெயரைச் சொல்லி கூப்பிடலாம். நீங்கள் மேடம் என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அவர் சொன்னார்.

  அப்போது தேவயானிக்கு ஹிந்தி, இங்கிலீஷ் மட்டுமே தெரியும். ஹிந்தியில் நான் அவரை தொடர்பு கொள்வேன். இந்த விஷயத்தில் தன்னை பெயர் சொல்லி அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேவயானி கூறினார். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஹீரோ முரளி சார், தேவயானியை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்.

  இந்த விவகாரம் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. இந்தப் பிரச்சினை முடிந்து பத்து நாட்கள் கழித்து மணிவண்ணன் சார் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். அவர் எங்கே இருக்கிறார் அந்த பொண்ணு தேவயானி? அவரை இங்கே வரச் சொல்லுங்க என்றார்.

  ஏனென்றால் தேவயானியுடன் மணிவண்ணன் காதல் கோட்டை படத்தில் நடித்துள்ளார். தேவயானியிடம் மணிவண்ணன் ‘ எதற்காக பெயர் வைக்கிறோம்? மற்றவர்கள் அழைப்பதற்குத் தானே பெயர் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் கூப்பிட வேண்டும் என்று பெயர் வைக்கிறோமா? இல்லை தானே’ என்று மணிவண்ணன் விளக்கம் கொடுத்தார். என்னையும் அவன் இவன் என்று பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நான் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு சொல்ல முடியுமா? என்றார்.

  எனவே நீங்கள் நடந்ததற்கு பூபதியிடம் நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அப்போது மணிவண்ணன் சார் மீது தேவயானிக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ ஆல்பம் தயாராக இருந்தது. அதனை எல்லாரும் பார்த்தோம். தேவயானி அந்த ஆல்பத்தை பார்த்து மிரண்டு போய்விட்டார். அற்புதமான ஒர்க்கை பூபதி செய்திருந்தார்.

  அப்போது அங்கிருந்த அனைவரின் முன்பாகவும் பூபதி ஐயம் சாரி என்று தேவயானி கூறினார். உங்கள் திறமையை நான் பார்க்கவில்லை. உங்களை ஜூனியர் டெக்னீசியன் என்று தவறாக நினைத்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறினார். இப்படி தேவயானியையே மன்னிப்பு கேட்க வைத்தவர் மணிவன்னன்.

  இவ்வாறு இயக்குனர் களஞ்சியம் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood