சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது - கே.எஸ்.ரவிக்குமார்

news18
Updated: July 21, 2019, 1:15 PM IST
சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது - கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார் | சூர்யா
news18
Updated: July 21, 2019, 1:15 PM IST
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது என்று பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய சூர்யா, “20 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருப்பதால், நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன்.

மீண்டும், மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம், சமமான தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஏன் மாணவர்களோ, ஆசிரியர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது. இதுதான் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது. நிச்சயமாக அதில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு. ஆனால் அச்சம் தரக்கூடிய நிறைய விஷயங்களும் உள்ளன.


அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும்” என்றார்.

சூர்யாவின் இந்த பேச்சு சர்ச்சையை உருவாக்கியது. பாஜகவினர் சூர்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூர்யாவுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல் நபராக சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து சூர்யா போல் நல்ல கருத்துகளை அனைவரும் பேச வேண்டும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

Loading...

இந்நிலையில் சூர்யாவின் பேச்சு குறித்த பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.ரவிக்குமார், “ நடிகர் சூர்யா சரியாக பேசியுள்ளார்.
நல்ல கருத்துக்களை தான் பேசியுள்ளார். அவருடைய முழு பேச்சையும் நான் கேட்டேன். அகரம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருவதால் கல்விக் கொள்கை குறித்த தகவல்கள் அவருக்கு தெரிய வாய்ப்புள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே அது குறித்து தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...