ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இன்று போய் நாளை வா’இளையராஜாவுடன் இணைந்த முதல் படம்… சுவாரசிய அனுபவங்களை பகிரும் பாக்யராஜ்…

‘இன்று போய் நாளை வா’இளையராஜாவுடன் இணைந்த முதல் படம்… சுவாரசிய அனுபவங்களை பகிரும் பாக்யராஜ்…

பாக்யராஜ்

பாக்யராஜ்

பாரதிராஜா படங்களில் அதிக இடங்களில் அமைதியான காட்சி இருக்கும். அதனால் இளையராஜா இசை அமைப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் அமையும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றுபோய் நாளை வா படத்தில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பாக்யராஜ் பணியாற்றினார். இந்தப் படம் குறித்த தனது அனுபவங்களை அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  பாக்யராஜ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது- 16 வயதினிலே படம் பண்ணும்போது நான் அதில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்தப் படத்திற்கு  இளையராஜா இசையமைத்திருந்தார். அப்போதிலிருந்தே எனக்கு அவர் மீது அதிக மரியாதை உண்டு அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார்.

  அந்த நேரத்தில் அப்போதுதான் நான் உதவி இயக்குனராக பணிக்கு செல்கிறேன். அந்த சூழலில் அவர் மியூசிக் டைரக்டர், நான் சாதாரண உதவி இயக்குனர். இதனால் அவருக்கும் எனக்கும் ஒரு டிஸ்டன்சை மெயின்டெய்ன் செய்து கொள்வேன். எனக்கு என் மீது நம்பிக்கை அதிகம் இருந்ததால் என்னுடைய முதல் படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களை புதியவர்களாக தேர்வு செய்தேன்.

  ‘இன்று போய் நாளை வா’ என்ற படத்தில் இளையராஜாவுடன் பணியாற்றினேன். அந்தப் படத்தை இயக்கி நான் நடித்தேன். நான் எப்போதும் அவரை பிரமிப்போடு தான் பார்ப்பேன். நான் சில வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு சென்றதால் இளையராஜாவும் என்னை மரியாதையுடன் பார்த்தார்.

  பாரதிராஜா படங்களில் அதிக இடங்களில் அமைதியான காட்சி இருக்கும். அதனால் இளையராஜா இசை அமைப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் அமையும். ஆனால் என் படத்தில் பெரும்பாலானோர் அதிகமான நேரங்களில் பேசிக்கொண்டே இருப்பார்கள் அதனால் வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே இளையராஜா பின்னணி இசை அமைத்தார்.

  ஒரு உதவி இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராகி, நடிகராக மாறிய என்னை இளையராஜா சற்று ஆச்சரியத்துடன்தான் பார்த்தார். என்னுடைய வளர்ச்சியை நேரில் கண்டவர் அவர்.இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bhagyaraj