மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், பாக்யராஜ், சமுத்திரக்கனி, சேரன் என பெரும்பாலான இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் முழுநேர நடிகர்கள் ஆனதுபோல் ஜான் மகேந்திரனும் தொடர்ச்சியாக நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
இயக்குனராக திரையுலகில் நுழைந்து வெற்றிக்கொடி கட்டிய பலரும் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் நடிகர்கள் ஆனது தமிழ் சினிமா சரித்திரத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் விஷயம். இந்த நீண்ட பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் விஜயின் சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன்.
தமிழின் மூத்த படைப்பாளி, தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒருவரான மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். தெலுங்கில் இரு படங்களை இயக்கி விட்டு 2005-ல் தமிழில் சச்சின் படத்தை இயக்கினார். விஜய் நடித்த இந்தத் திரைப்படம் தனக்கு லாபம் சம்பாதித்து தந்ததாக தயாரிப்பாளர் தாணு இப்போதும் குறிப்பிடுவது உண்டு. அதன்பிறகு ஈழத் தமிழர்களுடைய துயரங்களை பின்னணியாகக் கொண்ட ஆணிவேர் திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார்.
2007-ல் அத்திரைப்படம் வெளிவந்தது. அதன் பிறகு இதுவரை அவர் எந்தத் திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதே நேரம் சேட்டை காஸ்மோரா போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதினார். தெலுங்கு, இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்படும் பல படங்களுக்கு தமிழ் வசனங்கள் எழுதியுள்ளார். பல படங்களின் திரைக்கதையிலும் இவர் பங்களிப்பு செலுத்தியுள்ளார். படம் இயக்குவதற்கான வாய்ப்பு கனியாத நிலையில் கேசினோ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் ஜான் மகேந்திரன்.
அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். வாணி போஜன், ரங்கராஜ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டேன்லி சேவியர் படத்துக்கு இசை அமைத்துள்ளார். விக்னேஷ் ஜேகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் மகேந்திரனை நடிகராக அறிமுகப்படுத்தும் இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், பாக்யராஜ், சமுத்திரக்கனி, சேரன் என பெரும்பாலான இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் முழுநேர நடிகர்கள் ஆனதுபோல் ஜான் மகேந்திரனும் தொடர்ச்சியாக நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.