ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு யார் காரணம்? தயாரிப்பாளர் கே.ராஜன் பளிச்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு யார் காரணம்? தயாரிப்பாளர் கே.ராஜன் பளிச்

பிரின்ஸ் படம் - கே.ராஜன்

பிரின்ஸ் படம் - கே.ராஜன்

ஒரு படம் வெற்றி பெற்றாலும் அதற்கு இயக்குநர் தான் காரணம். தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குநர் தான் காரணம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு இயக்குநர் தான் காரணம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

    டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் படம் வெளியானது. படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படம் என்ற பெயரையும் பெற்றது.

    தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வழங்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் திணிக்கப்பட்ட காமெடி காட்சிகளாலும், சொதப்பலான திரைக்கதையாலும் பிரின்ஸ் படம் ரசிகர்களை கவர தவறியது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெறவும் இல்லை.

    கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே... நடிகர் கமல் ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

    இந்நிலையில், குருமூர்த்தி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ’ஒரு படம் வெற்றி பெற்றாலும் அதற்கு இயக்குநர் தான் காரணம். அதற்கு செலவு செய்த தயாரிப்பாளர்களும், கதை எழுதிய கதாசிரியர்களும் தான் காரணம். தோல்வியடைந்தால் அதற்கு இயக்குநர் தான் காரணம். தம்பி சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் ஆகியப் படங்கள் நல்ல வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு வெளியான பிரின்ஸ் வெற்றி பெறவில்லை. அதற்கு அந்த இயக்குநர் தான் காரணம்’ என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan