நேர்கொண்ட பார்வை படத்தில் கூடுதலாக 25 நிமிடக் காட்சிகள் ஏன்? - இயக்குநர் விளக்கம்!

இந்தியில் வெளியான இப்படத்தின் நீளம் 130 நிமிடங்கள். ஆனால் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது.

news18
Updated: August 5, 2019, 7:25 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் கூடுதலாக 25 நிமிடக் காட்சிகள் ஏன்? - இயக்குநர் விளக்கம்!
இயக்குநர் வினோத்
news18
Updated: August 5, 2019, 7:25 PM IST
பிங்க் படத்தின் நீளம் 130 நிமிடங்களாக உள்ள நிலையில் அப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் விளக்கமளித்துள்ளார்.

இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிங்க். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தில் நடிகர் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்தியில் வெளியான இப்படத்தின் நீளம் 130 நிமிடங்கள். ஆனால் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது. இதுகுறித்து ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், “மூலப்படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மாற்ற விரும்பவில்லை. அஜித் ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு கூடுதலாக 25 நிமிடங்களை நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்துள்ளேன். இதில் வித்யாபாலன் வருகிற 10 நிமிடங்களும் உள்ளன. படத்தின் மையக்கருத்தை இழக்காமல் கமர்ஷியல் படமாக உருவாக்க எண்ணினேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: தல VS தளபதி! திரைக்குள் நிகழ்ந்த போர்

Loading...

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...