அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வரும் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் தனக்காக கூடுதல் கவனத்தை இயக்குனர் ஹரி செலுத்தியதாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஹரியின் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பல் யானை என்ற அதிரடி ஆக்சன், ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்த மாதமே யானை வெளியாகவிருந்த நிலையில், விக்ரம் படத்தின் அதிரடி வெற்றி காரணமாக படத்தின் வெளியீடு அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ஹரியும், அருண் விஜய்யும் புரொமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினர். சமீபத்தில் அருண் விஜய் இதற்காக மலேசியாவுக்கு சென்று வந்தார்.
இதையும் படிங்க - ‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்
யானை படம் வெளியாகுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படம் குறித்து அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஆக்சன் ஹீரோ என்று நான் அழைக்கப்படுவதை விரும்பவில்லை. ஒரு நடிகர் என்பவர் எல்லா திறமைகளையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
எனது ரசிகர்களுக்காக மிகச்சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இந்த வாரம் யானை திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் நான் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறேன். அனைத்த விதமான ஆடியன்ஸ்களையும் யானை படம் திருப்திபடுத்தும்.
இதையும் படிங்க - நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்
தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய படமாக யானை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹரி படத்தில் இருக்க வேண்டிய எல்லா அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கும். அதையும் தாண்டி யானை படத்தில் எமோஷன் அதிகம் இருக்கும்.
வெறுமனே கமர்ஷியல் படமாக யானை அமைந்துவிடக் கூடாது என்பதில் ஹரி கவனம் செலுத்தினார். ட்ரெய்லரிலேயே ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு குடும்பம் சார்ந்த கதையை கொண்டது என்று தெரிந்திருக்கும்.
எனக்காக யானை படத்தில் கூடுதல் கவனத்தை ஹரி செலுத்தினார். அவரது மேக்கிங்கில் அதிக மாற்றம் செய்யப்பட்டது. ஹீரோவுக்கான மாஸ் காட்சிகள், அதிரடி வசனங்கள், பரபரப்பான கதைக்களம் என ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அவை யானை படத்தில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
இவ்வாறு அருண் விஜய் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.