Director Hari: இயக்குநர் ஹரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Director Hari: இயக்குநர் ஹரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் ஹரி

பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த இயக்குநர் ஹரி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
இயக்குநர் ஹரி கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இதன் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பழனியில் நடைபெற்று வந்தது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Poove Unakkaga: சன் டிவி ’பூவே உனக்காக’ சீரியலை விட்டு வெளியேறிய பிரபல நடிகை

இந்நிலையில் பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த இயக்குநர் ஹரி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குழுவின் பணியாற்றிய நபருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: