Home /News /entertainment /

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர் வெளியீடு…

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர் வெளியீடு…

யானை படத்தில் அருண் விஜய்

யானை படத்தில் அருண் விஜய்

யானை படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படம் ஜூன் 17-ம்தேதி திரைக்கு வருகிறது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜெட் வேக திரைக்கதைக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மெகா ஹிட்டாகின.

ஹரி இயக்கத்தில் கடைசியாக சாமி படத்தின் 2ம் பாகம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அருண் விஜய்யின் நடிப்பில் யானை படத்தை ஹரி உருவாக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க - தாத்தா முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய செந்தில் பேத்தி!

யானை படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, ராமச்சந்திர ராஜு, ராதிகா சரத்குமார், புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

யானை படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை ஹரி எழுதியுள்ளார். ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பாக இந்த படத்தை வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்திருக்கிறார்.



ஜி.வி. பிரகாஷ் இசையில் யானை படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. ஒளிப்பதிவு கோபிநாத், கலை மைக்கேல், எடிட்டராக ரூபன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பாடல்களை ஸ்நேகன், ஏகாதசி, அறிவு எழுதியுள்ளனர். அனல் அரசுவின் ஸ்டன்ட்டில் ட்ரெய்லரில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

யானை படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படம் ஜூன் 17-ம்தேதி திரைக்கு வருகிறது.

அரிவாள், கார்கள், ஆக்சன் என ட்ரெய்லரின் பெரும்பாலான காட்சிகள், ஹரியின் முந்தைய படங்களை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி