Home /News /entertainment /

H.Vinoth : அஜித் படங்களில் இதுவரை இல்லாத மாஸ் காட்சிகள் வலிமையில் இருக்கும்... எச்.வினோத் பேட்டி

H.Vinoth : அஜித் படங்களில் இதுவரை இல்லாத மாஸ் காட்சிகள் வலிமையில் இருக்கும்... எச்.வினோத் பேட்டி

நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை நம் சார்பாக ஹீரோ அஜித் சமாளிப்பதுதான் வலிமை படத்தின் கதை. - எச். வினோத்

நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை நம் சார்பாக ஹீரோ அஜித் சமாளிப்பதுதான் வலிமை படத்தின் கதை. - எச். வினோத்

நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை நம் சார்பாக ஹீரோ அஜித் சமாளிப்பதுதான் வலிமை படத்தின் கதை. - எச். வினோத்

    வலிமை படத்தின் முதல் பாதி இன்வெஸ்டிகேஷனாகவும், இரண்டாம் பாதி ஆக்சனாகவும் இருக்கும் என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அஜித்தின் வலிமை திரைப்படம் ஜனவரி 13-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

    ஏப்ரல் மாதம் பீஸ்ட், கே.ஜி.எஃப்., வெந்து தணிந்தது காடு என முக்கிய படங்கள் ரிலீசாக உள்ளதால் வலிமை மார்ச் இறுதியில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட காலத்தை அட்டகாசமாக பயன்படுத்திய தயாரிப்பாளர் போனி கபூர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளை முடித்துள்ளார்.

    இதையும் படிங்க : விஜய் 66 படத்தின் அப்டேட்டுகளைக் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    இந்நிலையில் வலிமை படம் குறித்து, இயக்குனர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது-

    அஜித்தின் ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையும் மனதில் வைத்து வலிமை படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக அனைவரையும் கவரும். நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை, நம் சார்பாக ஹீரோ அஜித் சமாளிப்பதுதான் வலிமை படத்தின் கதை.

    இதையும் படிங்க : விக்ரமின் 'மகான்' படத்துடைய கதை இதுதானா? எதிர்பார்ப்பை தூண்டும் ஓடிடி தளத்தின் பதிவு

    அஜித் படங்களில் இதுவரை இல்லாத மாஸ் காட்சிகள் வலிமையில் இருக்கும். போலீஸ் உடை அணியாத போலீஸ் கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். பெண்கள் மீது அக்கறையும், மிகுந்த மரியாதையும் கொண்டவர் அஜித். கெட்ட வார்த்தை பேசுவது அவருக்கு பிடிக்காது. நான் ஒருமுறை பேசியபோது இந்த வார்த்தை பேசாதீங்க என்று அட்வைஸ் செய்தார். அதிலிருந்து நான் கெட்ட வார்த்தை பேசுவது கிடையாது.

    சினிமாவில் உள்ள ப்ளஸ் மைனஸ் என்பது குறித்து தயாரிப்பாளர் போனிகபூருக்கு எல்லாம் தெரியும். வலிமை படத்திற்காக தலா ஒன்றரை லட்ச ரூபாய்க்கு 15 பைக்குகள், கார்கள், பஸ், லாரி வாங்கி தந்துள்ளார். வலிமை படத்தின் முதல் பாதி இன்வெஸ்டிகேஷனாகவும், இரண்டாம் பாதி ஆக்சனாகவும் இருக்கும். அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதத்தில் வலிமை எடுக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி