’ஹிப் ஹாப் தமிழா’ ஆதியுடன் கைகோர்க்கும் ஹெச்.வினோத்!

அஜித் 60 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது

news18
Updated: August 5, 2019, 1:54 PM IST
’ஹிப் ஹாப் தமிழா’ ஆதியுடன் கைகோர்க்கும் ஹெச்.வினோத்!
ஆதி
news18
Updated: August 5, 2019, 1:54 PM IST
ஆதி நடிக்கும் படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார் இயக்குநர் ஹெச்.வினோத்

இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது புதுமுக இயக்குநர் ராணாவுடன் கைகோர்த்து பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர் சி இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதியின் 4-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து இயக்குநர் வினோத் ‘ஆதியின் 4-வது படத்துக்கு நான் தான் கதை எழுதுகிறேன். என்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கான வசனத்தையும் நானே எழுதுகிறேன்’ என்று கூறியுள்ளார்


ஹெ.ச் வினோத் தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 8-ம் தேதி திரைக்கு வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். அஜித் 60 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது

Also watch

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...