ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னணி நடிகருக்கு கதை சொன்னதை உறுதிப்படுத்திய ஹெச்.வினோத்!

முன்னணி நடிகருக்கு கதை சொன்னதை உறுதிப்படுத்திய ஹெச்.வினோத்!

ஹெச்.வினோத்

ஹெச்.வினோத்

இந்தப் படத்தை லலித் குமார் தனது திரைப்படத் தயாரிப்பு பேனரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத், தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்குகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தப் படம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சமீபத்தில் ஒரு ஆன்லைன் மீடியாவுடனான உரையாடலில் கலந்துக் கொண்ட ஹெச்.வினோத், தனுஷிடம் ஒரு கதையை கூறியுள்ளதாக தெரிவித்தார். சுவாரஸ்யமாக, முதலில் அஜித்துக்கு இந்த கதையைக் கூறினாராம் வினோத். ஆனால் அவர்கள் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தங்கள் முதல் படமாக தேர்ந்தெடுத்தனர். பின்னர் 'வலிமை'யில் பணிபுரிந்தனர், இப்போது 'துணிவு' தயாராக உள்ளனர். மேலும் தான் அஜித்திடம் கூறிய கதை, தனது முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தை விட, அதிக அளவு அழுத்தம் கொண்ட ஒரு மோசடிக்காரன் பற்றியது என்றும் விளக்கினார் ஹெச்.வினோத்.

தனுஷை ஒரு மோசடிக்காரனாக திரையில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தை லலித் குமார் தனது திரைப்படத் தயாரிப்பு பேனரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

வாரிசு படத்தைப் பார்க்க வாங்க... அஜித் ரசிகர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைத்த விஜய் ரசிகர்!

இதற்கிடையே தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு அவர் நடித்துள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vinoth