Home /News /entertainment /

கமல்ஹாசனை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்

கமல்ஹாசனை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்

கமல் ஹாசன் மற்றும் எச்.வினோத்

கமல் ஹாசன் மற்றும் எச்.வினோத்

அஜித் பட வேலைகள் முடிவடைந்ததும் கமல்ஹாசன் எச். வினோத் படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • News18
  • Last Updated :
நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இயக்குனர் எச்.வினோத் கதை கூறியுள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், ஒன்று நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத். இவர் தற்போது அஜித் நடிக்கும் 61 வது படத்தை இயக்கி வருகிறார். இதற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான இடம் தேர்வு வேலைகள் நடைபெற்று வருகின்றன.



இந்த நிலையில் எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கதை கூறியுள்ளார். இருவரும் மூன்று முறை சந்தித்து பேசி உள்ளனர்.  ரஜினிகாந்துக்கு எழுதிய அரசியல் கதையை,  கமல்ஹாசனுக்கு எச்.வினோத் கூறி இருக்கிறார் என கூறப்படுகிறது.

Also read... ஆகஸ்ட் மாதம் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரு லிஸ்ட்!

அஜித் பட வேலைகள் முடிவடைந்ததும் கமல்ஹாசன் எச். வினோத் படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்தத் திரைப்படம் ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாராகிறது எனவும் தகவல் வெளியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Kamal Haasan

அடுத்த செய்தி