ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் 'ஜெய் பீம் ' இயக்குனர்.. தீயாய் பரவும் தகவல்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் 'ஜெய் பீம் ' இயக்குனர்.. தீயாய் பரவும் தகவல்!

ரஜினி, இயக்குநர் ஞானவேல்

ரஜினி, இயக்குநர் ஞானவேல்

கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்திற்காக இயக்குநர் ஞானவேல் கதை கூறியதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 65% நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி அன்று ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதன்பிறகு, ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக ஏற்கனவே 7 பேர் ரஜினியிடம் கதை கூறியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேலும் இணைந்துள்ளார். அவர், 2 மாதங்களுக்கு முன்னரே ரஜினியிடம் கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also read... WATCH - நடுவானில் பறந்த அஜித் பட பேனர்.. விமானத்தில் இருந்து குதித்து துணிவு பட விளம்பரம்.. மாஸ் காட்டும் படக்குழு!

ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகு ஞானவேல் இயக்கவுள்ள திரைப்படத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், ரஜினியிடம் ஞானவேல் கதை கூறினார் என்பது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth