Home /News /entertainment /

துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட்!

துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட்!

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் - கவுதம் வாசுதேவன் கூட்டணியில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், சிம்ரன், ராதிகா, தொலைக்காட்சி புகழ் டி.டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

நடிகர் விக்ரம் - கவுதம் வாசுதேவன் கூட்டணியில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், சிம்ரன், ராதிகா, தொலைக்காட்சி புகழ் டி.டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அந்தப் படத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கவுதம் வாசுதேவ மேனன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதற்கு பிறகு அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.  நடிகர் விக்ரம் வேறு படங்களில் பிசியானார்.  அத்துடன் துருவ நட்சத்திரம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.  இந்த திரைப்படம் வெளியாகுமா ஆகாதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், துருவ நட்சத்திரம் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.  அத்துடன் நடிகர் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகளை முடித்தவுடன் துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

Also read... உட்கார நாற்காலி தரவில்லை - இயக்குனர் கௌதம் மேனன் மீது புகார் சொன்ன கமல்

இதன் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் முடங்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் திரைக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.  விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி அடைந்தால், துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Entertainment, Gautham Vasudev Menon

அடுத்த செய்தி