Home /News /entertainment /

நடன இயக்குநர் பிருந்தாவிற்கு ஆக்‌ஷன் புதுசு இல்லை - இயக்குநர் கௌதம் மேனன்!

நடன இயக்குநர் பிருந்தாவிற்கு ஆக்‌ஷன் புதுசு இல்லை - இயக்குநர் கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் மேனன்,  நடன இயக்குனர் பிருந்தா

இயக்குநர் கௌதம் மேனன், நடன இயக்குனர் பிருந்தா

நடுநிசி நாய்கள் படத்தை தவிர அனைத்து படங்களிலும் பிருந்தாவுடன் பணியாற்றியுள்ளேன் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம் பெற்ற கற்க கற்க பாடலை நடன இயக்குனர் பிருந்தா இயக்கினார் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா ஹே சினாமிகா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்த அந்த திரைப்படம், காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது குமரி மாவட்டத்தின் Thugs என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தயாரிப்பாளர் சிபு தமீம் மகன் Hridhu Haroon நாயகனாக நடித்துள்ளார்.  இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவில் நடிகர் ஆர்யா, நடிகை குஷ்பூ, இயக்குனர்கள் பாக்யராஜ், கவுதம் வாசுதே மேனன், பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன்,  நடுநிசி நாய்கள் படத்தை தவிர அனைத்து படங்களிலும் பிருந்தாவுடன் பணியாற்றியுள்ளேன்.  வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம் பெற்ற காக்க காக்க பாடல் இப்படி தான் இருக்க வேண்டும் என்று மட்டும் கூறினேன். அந்த பாடலை முழுமையாக இயக்கியவர் பிருந்தா.  அதன் மூலம் ஆக்சன் அவருக்கு சிறப்பாக வரும் என்பது தனக்குத் தெரியும் என தெரிவித்தார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில், பிருந்தா இயக்கிய முதல் படமான ஹே சினாமிகா வெளியான போது அந்த டைட்டிலில் ஒன்னும் புரியவில்லை.  இரண்டாம் படமும் ஒரு புரியாத பெயராக இருந்தது என அவரிடம் கேட்டேன். அதன் பிறகு தான் Thugs என்றால் குண்டர்கள் என தெரிந்தது. அப்போது சரி ஆக்சன் படமாக வரும் என நினைத்தேன் என தெரிவித்தார்.

அத்துடன் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கதையாக கூறி இந்த படத்துடன் தொடர்பு படுத்தினார். குறிப்பாக,  அந்த கதையில் ஒரு காவலர் ஈசியாக எது வந்தாலும்,  கிடைத்தாலும் எதையும் நம்பாதே என்றார்.

Also read... நானே வருவேன் படத்திலிருந்து வீரா சூரா பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்

ஆனால் நிஜ வாழ்க்கையில் நம் ஜனங்கள் ஈஸியாக வரும் இலவசங்களை யாரும் வேண்டாம் என சொல்வதில்லை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். இலவசங்கள் குறித்து சமீபகாலமாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதை கூறியுள்ளார்.

அதேபோல் ஆர்யா பேசுகையில்,  பிருந்தாவிற்கு ஆக்சன் படங்கள்தான் சரியாக இருக்கும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் அப்படித்தான் அவர் இருப்பார். இந்த திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஆர்யா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Gautham Vasudev Menon

அடுத்த செய்தி