துல்கர் சல்மானுடன் இணைந்த கெளதம் மேனன்!

துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷனுடன் இயக்குநர் கெளதம் மேனன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

news18
Updated: January 9, 2019, 5:50 PM IST
துல்கர் சல்மானுடன் இணைந்த கெளதம் மேனன்!
துல்கர் சல்மான், கெளதம் மேனன்
news18
Updated: January 9, 2019, 5:50 PM IST
துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பது உறுதியாகியுள்ளது

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கர் சல்மானின் 25-வது படமான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். ரீத்து வர்மா, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தான் இயக்கும் படங்களில் கெஸ்ட் ரோலில் வருவது இயக்குநர் கெளதம் மேனனின் வழக்கம். முன்னதாக ‘கோலிசோடா 2’ படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.அதை உறுதிபடுத்தும் விதமாக ரக்‌ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷனுடன் இயக்குநர் கெளதம் மேனன் இருப்பது போல அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

Loading...
மேலும் ரக்‌ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இயக்குநர் கெளதம் மேனனுடன் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேறியது. மற்றவர்கள் சொல்வது போல அவர் சிறந்த மனிதர்’ என்று பதிவிட்டுள்ளார்also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...