ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த பிரபல இயக்குநர்!

விஜய்யின் தளபதி 67-ல் நடிப்பதை உறுதி செய்த பிரபல இயக்குநர்!

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்தில் கவுதம் மேனன் தவிர பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிருத்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலிகான் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

'வாரிசு' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்தப் படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை த்ரிஷா முதல் மன்சூர் அலி கான் வரை படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யுடன் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கிய இயக்குனர் கெளதம் மேனன், அந்த நேர்காணலில் இடம்பெற்றிருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 'தளபதி 67' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார். லோகேஷ் கனகராஜ் விரைவில் 'தளபதி 67' படத்தில் பணிகளை தொடங்கவிருக்கிறார். மேலும் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியானதும், தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசங்க பட அன்புவுக்கு கல்யாண வயசாச்சா? பொண்ணு யார் தெரியுமா?

தளபதி 67 படத்தில் கவுதம் மேனன் தவிர பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிருத்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலிகான் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படம் ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக உருவாகும் என்றும் அதில் விஜய் கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay