Home /News /entertainment /

சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன்… கதை தொடர்கிறது…

சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன்… கதை தொடர்கிறது…

சிம்பு - கவுதம் மேனன்

சிம்பு - கவுதம் மேனன்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.

    சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின்ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

    இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

    அடுத்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…

    சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

    இந்த படத்திலிருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் என 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.



    இது வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம்தான் என்றும், அடுத்த பாகமும் விரைவில் வெளியாகும் எனவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ட்ரெய்லர் Part 1 Kindling என டேக் லைன் கொடுத்துள்ளார்கள். அதாவது பார்ட் 1 வத்திக்குச்சி என முதல் பாகத்தை தான் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி