‘பட்டாஸ்’ அர்த்தம் என்ன...? சோழர் கால கதையா...? இதோ சில தகவல்கள்...

பட்டாஸ்  படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது

news18
Updated: July 29, 2019, 10:37 AM IST
‘பட்டாஸ்’ அர்த்தம் என்ன...? சோழர் கால கதையா...? இதோ சில தகவல்கள்...
பட்டாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்
news18
Updated: July 29, 2019, 10:37 AM IST
தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தின் கதை குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் பேசியுள்ளார்.

எதிர்நீச்சல், கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் படத்திற்கு பட்டாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


இந்நிலையில் படத்தின் கதை குறித்து சில தகவல்களை இயக்குநர் துரை செந்தில்குமார், ‘படத்தில் தனுஷ் மகன், அப்பா என்று 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் களரிக்கு முன்பு சோழர் காலத்தில் இருந்த ஒரு தற்காப்பு கலையை சுற்றி வருகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக தனுஷ் 15 முதல் 20 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார். நடிகை சினேகாவும் பயிற்சி எடுத்துக்கொண்டார். இது பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படத்தில் மகன் தனுஷின் பெயர் தான் பட்டாஸ். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட்டாஸ் என்ற பெயரே அவருடைய கதாபாத்திரம் குறித்து சொல்லிவிடும். இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

பட்டாஸ் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய், தனுஷின் படங்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Also watch

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...