• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நவீன சினிமாவின் தலைமகன் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் நினைவு தினம்!

நவீன சினிமாவின் தலைமகன் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் நினைவு தினம்!

சி.வி.ஸ்ரீதர்

சி.வி.ஸ்ரீதர்

Director CV Sridhar: தமிழ் திரையுலகில் அழியா புகழ்பெற்ற ஸ்ரீதர், 2008-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தனது, 75-வது வயதில் மரணமடைந்தார்.

  • Share this:
    தமிழ் திரையுலகில் பல புதுமைகளை படைத்த, நவீன சினிமாவுக்கு வித்திட்ட இயக்குநர் ஸ்ரீதரின் நினைவு நாளான இன்று அவரது திரைப் பயணம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

    தமிழ் திரையுலகை, ஒரு புதிய திசையில் அழைத்துச் சென்றவர்... ஒரு இயக்குனருக்காக படத்தை பார்க்கும் நிலையை, முதன் முதலாக தமிழ் சினிமாவில் உருவாக்கியவர். அவரது பெயர் தான் ஸ்ரீதர். ’ரத்த பாசம்’ திரைப் படத்தின் மூலம் , கதை வசனகர்த்தாவாக திரையுலகப் பிரவேசம் செய்த ஸ்ரீதர், அதன்பின் பல திரைப்படங்களில் வசனகர்த்தாவாக, தன் பெயரை பதித்து, பின் ’கல்யாணப் பரிசு’ திரைப்படம் மூலம், இயக்குநராக அடியெடுத்து வைத்தார்.

    ஸ்ரீதரின் அடுத்தடுத்த திரைப்படங்களில், ஆழமான கதை அமைப்பு, காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சி வெள்ளங்களில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரங்கள் போன்றவை, மேலோங்கி காணப்பட்டது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.



    ஸ்ரீதரின் வித்தியாசமான முயற்சியில் வெளிவந்த திரைப்படம் ’நெஞ்சில் ஓர் ஆலயம்’. மருத்துவமனையில் மட்டுமே நடக்கிற இந்த கதை, பின்னாளில் தமிழில் ஒரு காதல் காவியமானது.

    காதல் மட்டுமா காமடியிலும், தான் ஒரு புதுமை இயக்குனர் என்பதை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் உணர்த்தினார். இப்படத்தில் காஞ்சனாவையும் ரவிச்சந்திரனையும் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர்.



    சரித்திரம் படைத்த ஸ்ரீதரின் மற்றொரு படம் ‘வெண்ணிற ஆடை’. இதில் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரை உலகிலும், அதற்குப் பிறகு அரசியலிலும் சரித்திரம் படைத்தார் ஜெயலலிதா.

    கதாநாயகர்களுக்கானதாக இருந்த தமிழ் சினிமாவை, இயக்குநர்களின் சினிமாவாக மாற்றியதும், இந்த ஸ்ரீதர் தான்.. இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகியது.



    தமிழ் திரையுலகில் அழியா புகழ்பெற்ற ஸ்ரீதர், 2008-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தனது, 75-வது வயதில் மரணமடைந்தார். எம்.ஜி.ஆர் முதல் விக்ரம் வரை தலைமுறைகளை தாண்டியும் புதுமைகள் செய்தார். ஸ்ரீதரின் படம் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு கோடு கிழித்து, அதற்குள் அடைத்துவிட முடியாத வகையில் இருந்தது. அதனால் தான் அவர் புதுமை இயக்குநர் என்று இப்போதும் போற்றப்படுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: