ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'கடவுள் நேரில் வந்தா..?' விஜய் ஆண்டனியின் கேள்விக்கு நக்கல் பதிலளித்த இயக்குநர் அமுதன்!

'கடவுள் நேரில் வந்தா..?' விஜய் ஆண்டனியின் கேள்விக்கு நக்கல் பதிலளித்த இயக்குநர் அமுதன்!

விஜய் ஆண்டனி -அமுதன்

விஜய் ஆண்டனி -அமுதன்

ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், விரைவில் படம் வெளியாகும் எனவும் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் சி.எஸ் அமுதன் 'ரத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

அதிஷா வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

27 வயதில் மகன்... 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த பப்லு பிரித்விராஜ்?

இதைத் தொடர்ந்து ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும், விரைவில் படம் வெளியாகும் எனவும் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருந்தார். தவிர, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், கொலை உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

முன்னதாக ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கும் விஜய் ஆண்டனி சமூக பிரச்னைகள் குறித்தும் கருத்து தெரிவிப்பார். அவ்வப்போது வாழ்க்கை தத்துவங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் குறித்து பதிவிட்ட அவர், ‘ சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கிடையே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிச்சிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?” எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு நக்கலாக பதிலளித்துள்ள ரத்தம் படத்தின் இயக்குநர் 'எங்க ஹுரோவ டப்பிங் வர வைங்கனு கேப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த நக்கல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Tamil movies, Vijay Antony