சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு!
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு!
சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அக்னிசிறகுகள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் சென்ற வருட இறுதியில் ஆரம்பித்தது. இன்று படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அக்னிசிறகுகள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன் என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜயகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவற்றுடன் தமிழ்ப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார்.
அமுதனின் இயக்கம் குறித்து பிரமிப்பாக சமூகவலைத்தளத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ரத்தம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பத்திரிகையாளர் அதிஷா முதல் முறையாக திரைக்கதை எழுதியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ஜர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்ஜெயன, பிரதீப், பங்கஜ் போஹ்ரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ரத்தம் முதல் பார்வையில் அடர்த்தியான தாடி, கையில் கட்டுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ஆண்டனி உள்ளார். சி.எஸ்.அமுதனின் தமிழ்ப் படம் பிரபல படங்களையும், நடிகர்களையும், காட்சிகளையும் ஸ்பூப் செய்து எடுக்கப்பட்டது. அவர் இயக்கிய இரண்டாவது படம் (படத்தின் பெயரே இரண்டாவது படம்தான்) வெளியாகவில்லை. அதன் பிறகு தமிழ்ப் படம் 2 எடுத்தார். அதுவும் ஸ்பூப் தான். அமுதன் என்றால் பாரடி என்பதற்கு முற்றிலும் மாறாக இந்த ரத்தம் இருக்கும் என கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.