ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குனர் பதிவிட்ட பர்சனல் புகைப்படம்.. இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என பதறிய நடிகை!

இயக்குனர் பதிவிட்ட பர்சனல் புகைப்படம்.. இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என பதறிய நடிகை!

நடிகை மஹிமா நம்பியார்

நடிகை மஹிமா நம்பியார்

அதற்குள் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியும் இதற்கு ரியாக்ட் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் சி.எஸ் அமுதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும்  புகைப்படத்தை பார்த்து  “இது எனக்கு அசிங்கம், இந்தியாவுக்கு நான் திரும்ப மாட்டேன்” என ரிப்ளை செய்துள்ளார் நடிகை மஹிமா நம்பியார்.

  இயக்குனர் சி.எஸ் அமுதன் ரத்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார். இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ரத்தம் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தாய்லாந்து, பேங்காக் போன்ற இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

  எருமை சாணி புகழ் விஜய்க்கு கல்யாணம்.. பொண்ணு இவங்க தான்!

  இந்நிலையில் ஷூட்டிங்  ட்ராவலிங் நேரத்தில் நடிகை மஹிமா நம்பியார் சிறிது நேரம் அசந்து தூங்கி இருக்கிறார். இதை இயக்குனர் அமுதன் புகைப்படம் எடுத்து “ரத்தம் குழுவினரின் கடின உழைப்பபு” என ட்விட்டரில்  மஹிமாவை கிண்டல் செய்து இருக்கிறார். இதில் மஹிமாவையும் டேக் செய்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் மஹிமாவை கிண்டல் செய்ய, இதை கவனித்த நடிகை மஹிமா,  சி.எஸ் அமுதனின்  ட்விட்டர் பதிவில் ரிப்ளை செய்துள்ளார்.

  8 ஆம் நூற்றாண்டு பொன்னியின் செல்வனில் 21 ஆம் நூற்றாண்டு பொருள்கள்!

  அதில் “ அட கடவுளே இது எனக்கு அசிங்கம். இந்த பதிவுக்கு அப்புறம் நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை. இது சீட்டிங். எங்கே தயாரிப்பாளரின் கடின உழைப்பு புகைப்படம்?” என குறிப்பிட்டுள்ளார். அதற்குள் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியும் இதற்கு ரியாக்ட் செய்துள்ளார். அதில். “ அவங்க hardwork பன்றத பாக்கும் போது. அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு” என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ரத்தம் படகுழுவின் கடின உழைப்பு என்ன ? என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Tamil Cinema, Vijay Antony