வடிவேலுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகரை ஹீரோவாக்கும் சிம்புதேவன்
வடிவேலுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகரை ஹீரோவாக்கும் சிம்புதேவன்
சிம்புதேவன்
சிம்புதேவன் அடிப்படையில் ஒரு ஓவியர். நகைச்சுவையான படக்கதைகளை பிரபல பத்திரிகைக்காக வரைந்துள்ளார். . சேரனின் வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் உதவி இயக்குனராக சினிமாவுக்கு வந்த அவர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை இயக்கி இயக்குனரானார்.
இயக்குனர் சிம்புதேவன் வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி படத்தை இயக்க வேண்டியது. வடிவேலு முரண்டு பிடித்ததால் அந்தப் படம் மொத்தமாக கைவிடப்பட்டது. வடிவேலு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அந்தப் படம் இந்நேரம் வெளிவந்திருக்கும். இப்போது வடிவேலுக்குப் பதில் வேறு பிரபல நகைச்சுவை நடிகரை வைத்து புதிய படத்தை சிம்புதேவன் தொடங்க உள்ளார்.
சிம்புதேவன் அடிப்படையில் ஒரு ஓவியர். நகைச்சுவையான படக்கதைகளை பிரபல பத்திரிகைக்காக வரைந்துள்ளார். . சேரனின் வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் உதவி இயக்குனராக சினிமாவுக்கு வந்த அவர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை இயக்கி இயக்குனரானார். வடிவேலு முதல்முறையாக நாயகனாக நடித்த படம் அது.
நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓடாது என்ற தமிழ் சினிமா சென்டிமெண்டை உடைத்து படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிம்புதேவன் தொடர்ந்து அறை எண் 305 இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கினார்.
அதையடுத்து அவர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியை தொடங்கினார். வடிவேலு செய்த பிரச்சனையால் ஆறு வருடங்கள் சிம்புதேவனுக்கு வீணானது. கடைசியில் கசடதபற என்ற படத்தை சென்ற வருடம் இயக்கி வெளியிட்டார்.
சிம்புதேவன் மீனவர்கள் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். வடிவேலை வைத்து படம் செய்ய வேண்டியவர், அவர் செய்த பிரச்சனையால் இப்போது யோகி பாபு பக்கம் வந்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.