விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி... சூப்பர் டீலக்ஸ் குறித்து சேரன் புகழாரம்

news18
Updated: April 9, 2019, 6:27 PM IST
விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி... சூப்பர் டீலக்ஸ் குறித்து சேரன் புகழாரம்
சேரன் - விஜய் சேதுபதி
news18
Updated: April 9, 2019, 6:27 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரன் விஜய் சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். அதேவேளையில் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.



இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “வாழ்க்கைபற்றி சாமிபற்றி எது நல்லது எது கெட்டது யார்நல்லவர் யார்கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைதான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது. சூப்பர் டீலக்ஸ்.

முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.



ஆபாசவார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ளமுடியாத சினிமாதான் சூப்பர் டீலக்ஸ்.காட்சிவடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது.. அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்” என்று கூறியுள்ளார்.

வாக்கு சேகரிக்கும் இடத்தில் மீன் வியாபாரியாக மாறிய மன்சூர் அலிகான் - வீடியோ






சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...