விஜய்யை பார்த்து வருத்தத்தை நேரில் சொல்லி விட வேண்டும் - சேரன்

விஜய் படத்தை கைவிட்டது பெரிய தவறு என்று கூறியிருக்கும் இயக்குநர் சேரன், தவறுக்கான வருத்தத்தை நேரில் அவரிடம் சொல்லிவிட நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யை பார்த்து வருத்தத்தை நேரில் சொல்லி விட வேண்டும் - சேரன்
சேரன் - விஜய்
  • Share this:
தனியார் சேனலுக்கு விஜய் கொடுத்த பேட்டியை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படத்தைப் பாராட்டி பேசியுள்ளார் விஜய். மேலும் தான் வாழ்க்கையில் கடந்து வந்த ஆட்டோகிராஃப் கதைகளையும் விஜய் பேசியிருந்தார்.

இந்த பதிவைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்த தவறை நான் செய்திருக்க கூடாது. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.
அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்... அதுவே இன்று அவரின் உயரம்” இவ்வாறு இயக்குநர் சேரன் குறிப்பிட்டிருக்கிறார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading