ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு...'' - ட்விட்டில் டிவிஸ்ட் வைத்த சேரன்!

''மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு...'' - ட்விட்டில் டிவிஸ்ட் வைத்த சேரன்!

இயக்குநரும் நடிகருமான சேரன்

இயக்குநரும் நடிகருமான சேரன்

இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் சேரன், 'பொற்காலம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' என தமிழின் மிக முக்கியமான படங்களைக் கொடுத்தார். இயக்குநர் தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை' படத்தின் மூலம் நடிகரான அவர், 'ஆட்டோகிராஃப்' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அவருக்கு மாபெரும் அடையாளத்தைத் தந்தது.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான 'திருமணம்' என்ற படத்தை சேரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார். பிக்பாஸில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் துவங்கப்படவில்லை.

சேரன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படம் மட்டுமே வெளியாகியிருந்தது. தற்போது 'தமிழ்க்குடிமகன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வணணன் இயக்கிவருகிறார்.

இந்த நிலையில் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தைப் பகிர்ந்த அவர், ''இன்னிக்கு ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருந்தேன்... சிலர் நடிக்கிறத பாத்துட்டு இருந்தேன்... அப்போ உங்க ஞாபகம் வந்துச்சு .. We miss you sir.. இப்படி சிரிச்சு பாத்து 100 போட்டோ எடுத்து டெலிட் பண்ணிட்டேன்.. ஹாஹா.. மன்னிச்சுக்குங்க எங்கள நாங்க நடிகர்கள்னு சொல்லிக்கிறதுக்கு..'' என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து யாருடைய நடிப்பையோ மறைமுகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

First published:

Tags: Actor Sivaji ganesan, Director cheran