விஜய் சேதுபதிக்காக எழுதிய கதை எப்படி இருக்கும் - சேரன் விளக்கம்!

விஜய் சேதுபதிக்காக எழுதிய கதை எப்படி இருக்கும் - சேரன் விளக்கம்!
சேரன் | விஜய் சேதுபதி
  • Share this:
விஜய் சேதுபதிக்காக தான் எழுதியிருக்கும் கதை குறித்து இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா படம் தொடங்கி பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சேரன், நடிகராகவும் பல படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.


இதையடுத்து கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேரன் அதிகம் பேரால் ரசிக்கப்படும் நபராக அறியப்பட்டார். அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார் இயக்குநர் சேரன்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்காக தான் எழுதிய கதை எவ்வாறு இருக்கும் என்பதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.” என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.


மேலும் படிக்க: பாஜக தொழிலதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் தரப்பு பதில்..!
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading