Home /News /entertainment /

எந்த பெருமை பொங்கும் கூட்டத்தோடும் சேராதவன் - சேரனின் தமிழ்க்குடிமகன்!

எந்த பெருமை பொங்கும் கூட்டத்தோடும் சேராதவன் - சேரனின் தமிழ்க்குடிமகன்!

தமிழ்க்குடிமகன்

தமிழ்க்குடிமகன்

சேரன் நாயகனாக நடிக்க புதிய படம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிம்புதேவன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் சேரன் இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். அவரது நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சேரன் நாயகனாக நடிக்க புதிய படம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிம்புதேவன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இந்த தொடக்கவிழாவில் கலந்து கொண்டு சேரனை வாழ்த்தினார்.

தமிழ்க்குடிமகன் என்ற பெயரும், சிட்டிசன் ஆஃப் தமிழ்நாடு என்ற உப தலைப்பும் தமிழ் இனம் சார்ந்த கதையாக தமிழ்க்குடிமகன் இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. லட்சுமி கிரியேஷன்ஸ் தமிழ்க்குடிமகனை தயாரிக்கிறது. இசக்கி கார்வண்ணன் படத்தை இயக்குகிறார். ராஜேஷ் யாதவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபமாக தமிழில் அதிகப்படங்களுக்கு இசையமைக்கும் சாம் சிஎஸ் தமிழ்க்குடிமகனுக்கு இசையமைக்கிறார்.

Director Cheran starring Tamilkudimagan movie, Director Cheran, Director Cheran movie, Director Cheran new movie, Director Cheran upcoming movie, சேரன், இயக்குநர் சேரன், இயக்குநர் சேரன் படங்கள், தமிழ்க்குடிமகன், சேரன் தமிழ்க்குடிமகன், தமிழ்க்குடிமகன் திரைப்படம்

நடிகராக இது சேரனுக்கு 36-வது படம் என கூறப்படுகிறது. படம் குறித்து கூறியிருக்கும் சேரன், "இந்த தமிழ்க்குடிமகன் எந்த பெருமை பொங்கும் கூட்டத்தோடும் சேராதவன், ஆனால், எல்லோருக்கும் பிடித்தமானவன்" என தெரிவித்துள்ளார். அத்துடன் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், சிம்புதேவன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோருக்கு சமூகவலைத்தளத்தில் நன்றியும் கூறியுள்ளார் சேரன்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி