முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Director Cheran: பிறந்தநாள் வாழ்த்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த சேரன்!

Director Cheran: பிறந்தநாள் வாழ்த்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த சேரன்!

சேரன்

சேரன்

பிக்பாஸ் 3-ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட சேரன் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் கூறப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கு தற்போது இயக்குநர் சேரன் நன்றி தெரிவித்திருப்பது ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.

சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அதில் நடித்தும் இருப்பவர் இயக்குநரும் நடிகருமான சேரன். குறிப்பாக அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவும் அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் தேசிய விருதை வென்றது.

Nayanthara: நயன்தாரா போலவே மேக்கப்! இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகும் படம்!

இந்நிலையில் கடந்த் பிக்பாஸ் 3-ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட சேரன் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். குறிப்பாக லாஸ்லியாவுக்கு நிறைய ஆலோசனைகளை கூறி வந்தார். அவர் ‘சேரப்பா’ எனக் கூப்பிடுவது ரசிகர்களிடமும் பிரபலமானது. லாஸ்லியாவின் பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது கூட, ’சேரன் உன் நல்லதுக்காகத் தான் சொல்கிறார். அவர் சொல்வதைக் கேளு’ என அவருக்கு அட்வைஸ் செய்தனர்.

சேரன் பிறந்தநாளுக்கு சன் டிவி பதிவிட்ட ட்வீட்

பிக் பாஸுக்கு பிறகு ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்திருந்தார் சேரன். ரஜினி பிறந்த அதே டிசம்பர் 12-ம் தேதி தான் சேரனுக்கும் பிறந்தநாள். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு சேரன் பதிலளித்தது தான் தற்போது ட்ரோலுக்கு காரணமாகியிருக்கிறது.

எதற்காக என்கிறீர்களா? சன் டிவி-யின் ட்வீட்டுக்கு 7 வருடம் கழித்து இப்போது ‘சாரி பாக்கல’ எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் சேரன். இதையடுத்து, என்ன தான் பாக்கலைன்னாலும் ஒரு நியாய தர்மம் வேணாமா சேரன் சார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பின்னர் அந்த ட்வீட்டை அவர் நீக்கி விட்டார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director cheran