கொரோனா தொற்று இல்லாதவர்களை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை

கொரோனா நோய்த் தொற்று இல்லாதவர்களை பரிசோதித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தொற்று இல்லாதவர்களை சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் - முதல்வருக்கு சேரன் கோரிக்கை
இயக்குநர் சேரன் | எடப்பாடி கே.பழனிசாமி
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கும் இயக்குநர் சேரன், “ அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்..

எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.


மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க: வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ₹ 5 லட்சம் நிதி அறிவித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading