Home /News /entertainment /

ஆடையின்றி நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு!

ஆடையின்றி நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு!

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

ராஜாவுக்கு செக் படத்தின் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே ஆடையின்றி நடித்தற்காக சேரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘மழை’ பட இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். இத்திரைப்படத்தில் வில்லனாக இர்பான் நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் பெண் கேரக்டரில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே படத்தின் ஒரு காட்சிக்காக ஆடையின்றி நடித்திருப்பார். அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்தக் காட்சி குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் சேரன், “ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.



சேரனின் இந்த பாராட்டுக்கு நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நன்றி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரபல நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்!

பார்க்க: கவிதையில் வாழ்த்தி காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

Published by:Sheik Hanifah
First published:

Tags: Director cheran

அடுத்த செய்தி