சூர்யாவின் அதிரடி அறிக்கை... பாராட்டிய சேரன்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இயக்குநர் சேரன் அவரை பாராட்டியுள்ளார்.

சூர்யாவின் அதிரடி அறிக்கை... பாராட்டிய சேரன்
சூர்யா | இயக்குநர் சேரன்
  • Share this:
சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து அரசியல்வாதிகள், திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா , அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பகக்த்தில் குறிப்பிட்டிருக்கும் இயக்குநர் சேரன், “சூர்யா
கைகோர்த்ததற்கு நன்றி. அருமையான கடிதம். அஹிம்சை முறையில் எடுத்துச்சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும்போது அரசும் தன்னை மாற்றிக்கொள்ளும் நம்புவோம்.” என்று கூறி அதை தமிழக முதலமைச்சருக்கும் டேக் செய்திருக்கிறார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading