தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் - எல்.முருகன் கருத்தை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற பாஜக தலைவரின் கருத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் - எல்.முருகன் கருத்தை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர்
News 18
  • Share this:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக மாநில அளவிலான புதிய நிர்வாகிகளை நியமித்து நேற்று அதற்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவில் இணைந்த திரைத்துறையினர் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர், கங்கை அமரன் ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் மாநில OBC அணிக்கு மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுளார். இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது பாஜக. இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும்” என்று தெரிவித்தார்.தமிழக பாஜக தலைவரின் கருத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கும் தமிழ் பட இயக்குநர் சி.எஸ்.அமுதன், “மாணவர்களே, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவது உங்களது தன்னம்பிக்கையைக் குறைக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading