முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''ரஜினி கண்ணுல இருக்கிற பவர் , இவர் கண்ணுலயும் இருக்கு'' - நடிகரை புகழ்ந்த இயக்குநர் பிருந்தா

''ரஜினி கண்ணுல இருக்கிற பவர் , இவர் கண்ணுலயும் இருக்கு'' - நடிகரை புகழ்ந்த இயக்குநர் பிருந்தா

தக்ஸ் படக்குழுவினர்

தக்ஸ் படக்குழுவினர்

ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் தக்ஸ் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சினிமாவின் பிரபல நடன இயக்குனரான பிருந்தா தற்போது திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவருடைய இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராய் உள்ளிட்டோர் நடித்த 'ஹே சினாமிகா' என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் புலி மற்றும் விக்ரம் நடித்த சாமி-2 படங்களை தயாரித்த சிபு தமீம் மகன் ஹிரிது ஹரூனை வைத்து 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

'தக்ஸ்' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் பிருந்தா,  நடிகர் ஹிரிது ஹரூனை முனீஸ் காந்த், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இயக்குனர் பிருந்தா, ''தக்ஸ் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது.  இதில் நாயகனாக அறிமுகமாகும் ஹிரிது ஹரூனை சிறப்பாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் தன் மகனை நாயகனாக நடிக்க வைக்கலாம் என்று கூறிய போது சற்று தயங்கினேன்.  ஆனால் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் கண்ணில் இருக்கும் பவர், இவரின் கண்ணில் இருக்கிறது'' என பிருந்தா தெரிவித்தார்.

அதை போல் இசையமைப்பாளர் சான்.சி.எஸ் பேசுவையில், தற்போது நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதாகவும்,  தூங்குவதற்கு கூட நேரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் பார்ட்டிக்கு செல்லும் வழக்கம் தனக்கு கிடையாது. அப்படி இருந்தும் வேலை அதிகமாக இருப்பதால் தன்னுடைய தூங்கும் நேரம் குறைந்து விட்டதாக கூறினார். தக்ஸ் திரைப்படத்திற்கு கடுமையாக உழைத்திருப்பதாகவும் சாம்.சி.எஸ் தெரிவித்தார். தக்ஸ்  திரைப்படத்தை சிபு தமீம் உடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

First published:

Tags: Rajinikanth