ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''நாயகன் என்னை உலுக்கியது; தூங்கவிடாமல் செய்தார் மணிரத்னம்'' - பாரதிராஜா பகிர்ந்த வார்த்தைகள்!

''நாயகன் என்னை உலுக்கியது; தூங்கவிடாமல் செய்தார் மணிரத்னம்'' - பாரதிராஜா பகிர்ந்த வார்த்தைகள்!

மணிரத்னம் - பாரதி ராஜா

மணிரத்னம் - பாரதி ராஜா

இன்றைய தலைமுறை டைரக்டர்களுக்கு மணிரத்தினம் ஒரு விதை போன்றவர். இன்னும் நான் தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குனர் மணிரத்னம் குறித்து இயக்குனர் இமயம் பாரதி ராஜா சிலாகித்து பேசியுள்ளார். தன்னை தூங்க விடாமல் செய்த முதல் மனிதர் என்று மணிரத்னத்தை அவர் வியந்து பாராட்டியுள்ளார்.

  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாரதிராஜா பேசியதாவது-

  மணிரத்தினம் கிடைப்பதற்கு அரிய ஒரு ஜீனியஸ். மணிரத்னம் தான் என்னை தூங்கவிடாமல் செய்த முதல் மனிதர். அவரது நாயகன் படம் என்னை உலுக்கி எடுத்தது. பகல் நிலவு என்ற ஒரு அற்புதமான படத்தை மணிரத்னம் செய்தார்.

  படத்தின் கேரக்டர்கள், கதை விவரிப்பு என அனைத்தும் மிகச் சிறப்பாக அந்த படத்தில் கையாளப்பட்டிருக்கும். அதன்பின்னர் நாயகன் படத்தை பார்த்தேன். பார்த்துவிட்டு நானே அவமானமாக உணர்ந்தேன். நீ எல்லாம் என்ன கிழிச்ச என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

  சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல தொழிலதிபரின் மகன்…

  டெக்னிக்கலாக, கதை சொல்லக்கூடிய முறையிலும், எந்த சீன்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதையும், அழகாக நாயகன் படத்தில் மணிரத்னம் செய்திருப்பார். அதனால்தான் நான் மணிரத்னத்தின் மாபெரும் ரசிகன்.

  இன்றைய தலைமுறை டைரக்டர்களுக்கு மணிரத்னம் ஒரு விதை போன்றவர். இன்னும் நான் தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நல்ல கலைஞன் என்பவன் தொடர்ந்து உழைக்க கூடியவனாக இருப்பான். அவன் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டவன்.

  கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின்ரிலீஸ் தேதி அறிவிப்பு…

  இன்றைய தலைமுறை இயக்குனர்களைப் பார்த்து நான் வியக்கிறேன். இளம் இயக்குனர்களை பார்க்கும்போது என்னுடைய ரத்தம் இன்னும் தூய்மை அடைகிறது. மேடையில் மிக அழகாக, எளிதாக, சுருக்கமாக மணிரத்னம் பேசிவிட்டு செல்வார். ஆனால் நான் அப்படியல்ல. எதையாவது பேசி விடுவேன். அது ஏதாவது ஒரு விவகாரத்தில் கொண்டு போய் முடியும். ஒருசமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவேன்.

  ஒரு கலைஞருக்கு சுதந்திரம் வேண்டும். அந்த சுதந்திரம் இல்லாமல் எதற்கு படம் எடுக்க வேண்டும்? எதற்கு எழுத வேண்டும்? கலைஞனை விமர்சிக்கலாம். ஆனால் கட்டுப்படுத்த முடியாது. எல்லைகளைத் தாண்டியவன் கலைஞன். அவனுக்கு இலக்கணமே கிடையாது. இலக்கணங்களை உடைக்காமல் கலை வளராது.

  இவ்வாறு பாரதி ராஜா பேசினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bharathiraja, Mani rathnam