என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை விஜய் - பாரதிராஜா வாழ்த்து

என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை விஜய் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை விஜய் - பாரதிராஜா வாழ்த்து
விஜய் | பாரதிராஜா
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் அவரது தீவிர ரசிகர்கள்.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், திரைபிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து செய்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமா உலகின் இயக்குநர் சிகரமான பாரதிராஜா விஜய்க்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “என்கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழக இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாடப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க: ‘தளபதி’ என்ற அடைமொழியுடன் விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்

காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும், நையாண்டி, நக்கலுக்கான அந்த, உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading