Home » News » Entertainment » CINEMA DIRECTOR BHARATHIRAJA WISHES TO KAMAL HAASAN MSB

‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

திரைத்துறையில் 61 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்காக கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன்’- கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து
கமல்ஹாசன் உடன் பாரதிராஜா
  • Share this:
1960-ம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கமல்ஹாசன். இன்றுடன் அவர் சினிமாவுக்கு வந்து 61 ஆண்டுகளாகிறது. தனது தனித்திறமையால் தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன் சினிமாவைத் தாண்டி மக்கள் பணிக்காக முழு நேர அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகி 61 ஆண்டுகளாகியிருக்கும் நிலையில் கமல்ஹாசனுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில், “இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள், உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.



‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். கொரோனா பிரச்னை காரணமாக தடைபட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இயல்புநிலை திரும்பிய பின்னர் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading