முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாளை மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் இயக்குநர் பாரதிராஜா

நாளை மறுதினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா புதன் கிழமை மதியம் 12 மணிக்கு மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்புகிறார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து நாளை மறுதினம் வீடு திரும்புகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 21-ம் தேதி தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். அதன் பின்பு 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் அவருடைய உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இயக்குநர் பாரதிராஜா இருந்து வந்தார். அந்த சமயத்தில் தன்னுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, நலமாக உள்ளேன் என அறிக்கை மூலமாக பாரதிராஜா கூறியிருந்தார்.

கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்க தெரியும்... ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.  இந்த நிலையில் பாரதிராஜா பூரண குணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் மதியம் 12 மணி அளவில் பாரதிராஜா இல்லம் திரும்புகிறார்.

First published:

Tags: Director bharathiraja