மூத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் 25,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இதனால் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் சமீபமாக கொரோனா தொற்றால் பல
பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, சத்யராஜ், குஷ்பு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டனர். இந்நிலையில் தற்போது
இயக்குநர் பாரதிராஜா
கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பாரதிராஜாவை விசாரித்த இளையராஜா அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, மதிமுக தலைவர் வைகோ மற்றும் இயக்குநர் பாரதிராஜா விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.