Home /News /entertainment /

நலம் பெற்று வருகிறேன்... மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை

நலம் பெற்று வருகிறேன்... மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை

பாரதிராஜா

பாரதிராஜா

Bharathiraja Health Condition | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன் என பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இதையடுத்து நேற்று எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சேர்ந்த முக்கிய மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் உடல் நலவு குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

    Also Read : கடைசி நேரத்தில் கோப்ரா படத்திற்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்

    மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மீது அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

    அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதளம் மூலமாகவும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்திக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் எனவும் கூறியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி