ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''திருமாவளவன் வாழத்தெரியாதவர்...'' - இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு

''திருமாவளவன் வாழத்தெரியாதவர்...'' - இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு

திருமா- பாரதிராஜா

திருமா- பாரதிராஜா

சனாதனம் வேரோடு கிள்ளி எறிய வேண்டும்; நம் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாள் மணிவிழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “நான் பார்த்த வகையில் கை சுத்தமுள்ள அரசியல்வாதி திருமாவளவன். காமராஜர், கக்கன், ஜீவா போன்று சுத்தமானவர்; ஆனால் வாழத்தெரியாதவர்.  பிரபாகரனுக்கு பின் நான் ரசித்த தலைவன் திருமாவளவன்.

எனக்கு சோர்வு வரும்போதெல்லாம் அவரின் மீசையை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். கம்பீரமும் துணிச்சலும் கொண்ட மீசை மனிதன். மரியாதையின் உச்சமாக அவரை பார்க்கிறேன். இந்தப் பிள்ளை தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம். அரசியலில் நாணயத்தை காப்பது கஷ்டம். ஆனால் அவர் காப்பாற்றுகிறார்.

திருமாவின் கைப்பிடித்தாலே ஒரு சுகம். ஐ லைக் யூ திருமா! சிம்மக்குரலோன் சிவாஜி என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி கர்ஜிக்கும் பேச்சாளர் திருமா. சனாதனம் வேரோடு கிள்ளி எறிய வேண்டும்; நம் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். எனக்கு வயது 83 வயதாகிறது; என் வயதைத் தாண்டி திருமா நூறாண்டுகள். அரசியலில் நிலைத்து நின்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என உணர்ச்சி பொங்க பேசினார்.

First published:

Tags: Bharathiraja, Thol. Thirumavalavan