முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா

மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பாரதிராஜா உடல் நலவு குறை காரணமாக கடந்த 23ஆம் தேதி பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பாரதிராஜா உடல் நலவு குறை காரணமாக கடந்த 23ஆம் தேதி பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடலில் சோடியம் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் அவரின் உடல்நலம் முன்னேறி வருவதாகவும் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள் கூறினர். இந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைப்படி பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக இயக்குனநர் பாரதிராஜா மாற்றப்படுகிறார்.

Also read... திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய நடிகர் தனுஷ்

இருந்தாலும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள்  கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director bharathiraja