Home /News /entertainment /

இயக்குநர் பாரதிராஜா நடனமாடினார், ஹேர் கலரிங் செய்துள்ளார் - சிகிச்சையளித்த மருத்துவர் பேட்டி

இயக்குநர் பாரதிராஜா நடனமாடினார், ஹேர் கலரிங் செய்துள்ளார் - சிகிச்சையளித்த மருத்துவர் பேட்டி

பாரதிராஜா

பாரதிராஜா

தங்கர் பச்சானுடன் அவருடைய அடுத்த படத்துக்காக முடி கலரிங் செய்ய வேண்டும், செய்யலாமா என கேட்டார், செய்யலாம் என கூறிய பிறகு இன்றே சற்று கலரிங் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
"இயக்குநர் பாரதிராஜா நடனம் ஆடினார், அடுத்த படத்துக்கு முடி கலரிங் செய்துள்ளார், நன்கு குணமடைந்துள்ளார்" என சிகிச்சை அளித்த மருத்துவர் நம்மிடம் தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த உடற்கூறு மருத்துவர் சுவாமி கண்ணுவுடன் நமது செய்தியாளர் சாரதாவிடம் பகிர்ந்த விஷயங்களை இங்கே பதிவிடுகிறோம்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு நுரையீரலில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. பாக்டீரியா கிருமியினால் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. சில பேருக்கு லேசான தொற்று ஏற்படும். சிலருக்கு தீவிரமாக இருக்கும். பாரதிராஜாவுக்கு தீவிர தொற்று ஏற்பட்டது. எனவே ஆக்சிஜன் குறைந்து மயக்கமான நிலைக்கு சென்று விட்டார். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து மருந்து வழங்கியதால், விரைவில் குணமாகிவிட்டார்.

நுரையீரல் மருத்துவர் குழு,  உடற்கூறு மருத்துவர் குழு, தீவிர சிகிச்சை மருத்துவர் குழு ஆகிய குழுக்களால் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. நெஞ்சில் இருக்கும் சளியை வெளியே கொண்டு வர நெஞ்ச இயன்முறை வழங்கப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜா மிக நன்றாக இருக்கிறார். காலையில் கொஞ்சம் நடனம் ஆடி காட்டினார். அவர் இப்போது பழைய நிலைக்கு வந்துவிட்டார். எப்போதும் படங்கள் பற்றியே பேசி வருகிறார். மீண்டும் திரைப்பட பணிக்கு திரும்ப முனைப்புடன் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனி எனக்கும் என் வளர்ப்பு மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - முற்றுப்புள்ளி வைத்த ராஜ்கிரண்!

அவருடைய சினிமாக்கள் பற்றி தான் பேசினோம். அவர் இயக்கியதில் எது பிடிக்கும் என்று நான் கேட்டேன். எல்லாமே என் குழந்தைகள், அதில் எப்படி ஒன்றை தேர்ந்தெடுப்பது எனக் கேட்டார். எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது வீட்டில் உள்ள திரையரங்கில் பதினாறு வயதினிலே படத்தை போட்டுக் காண்பிப்பேன் என்றார்.

தங்கர் பச்சானுடன் அவருடைய அடுத்த படத்துக்காக முடி கலரிங் செய்ய வேண்டும், செய்யலாமா என கேட்டார், செய்யலாம் என கூறிய பிறகு இன்றே சற்று கலரிங் செய்துள்ளார். அவர் நன்றாக பேசுகிறார், நன்றாக நடக்கிறார். நல்ல நிலையில் உள்ளார்
Published by:Shalini C
First published:

Tags: Director bharathiraja

அடுத்த செய்தி