விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள மாமனிதன் திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கு ரஜினி பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பாரதிராஜாவும் வாழ்த்து கூறியிருப்பதால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், வெளிவந்துள்ள மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்'
யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை, நடிகர் ஆர்கே சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சார்பாக வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
முதன்முறையாக இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். படம் வெளியான அன்று மாமனிதன் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl ‘s brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022
Thanku so much @rajinikanth sir for praising #mamanithan 👍💯 family entertainer . pic.twitter.com/3zQp6sN4Mi
— RK SURESH (@studio9_suresh) June 25, 2022
இதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டினார்.
இதையும் படிங்க - வைரலாகும் விக்கி – நயன்தாரா ஹனிமூன் ஃபோட்டோஸ்…
இந்த நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா மாமனிதன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி நேரில் அழைத்துப் பேசிய பாரதிராஜா அவரை தன் மகன் என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.