Home /News /entertainment /

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்பினார் பாரதிராஜா

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்பினார் பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா

சமீபத்தில் நடிகைககள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, சத்யராஜ், குஷ்பு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டனர்.

    இயக்குனர் பாரதி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பாதிப்பு குணம் அடைந்து அவர் இன்று இல்லம் திரும்பியுள்ளார். இதுதொடர்பான தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் 25,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இதனால் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் சமீபமாக கொரோனா தொற்றால் பல பிரபலங்கள்பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    Also Read : இயக்குநருக்கு 1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர் 

    த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, சத்யராஜ், குஷ்பு உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டனர். இதற்கிடையே, இயக்குநர்பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    Also Read : மிஷ்கினின் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி

    இந்நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக பாரதி ராஜா கூறியுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர். திரு நடேசன் அவர்களின் நேரிடை கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று இல்லம் திரும்பி விட்டேன். திரு. நடேசன் அவர்களுக்கும், பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தமிழக அரசு, அரசு மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என் உடல் நிலை குறித்து தொடர்ந்து தொலை பேசி ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்த நண்பர்கள், இயக்குனர்கள், திரைத்துறை நண்பர்கள், உறவுகள், அரசியல் பெருமக்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசங்களை அணிந்து பொது வெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி