திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில் மே.10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கொரோனா தினசரி பாதிப்பும் 35 ஆயிரத்துக்குக் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.
அதனால் மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
Also read: 2 நாள் சோர்வு, இப்போ நார்மலாகிட்டேன்’ தடுப்பூசி குறித்து நடிகர் சூரி!
இதையடுத்து, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா நேற்று அவரது இல்லத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.
தேனி - அல்லிநகரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தேனி என்.ஆர்.டி.நகரில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று கோவிஷீல்டு (முதல் டோஸ்) செலுத்தினர்.
தொடர்ந்து, இரண்டாவது டோஸ் 84வது நாளில் போடப்படும் என்று தேனி - அல்லிநகரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவுச் செல்வம் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.